Canalblog
Suivre ce blog Administration + Créer mon blog

Vediyal.com

Vediyal.com
Publicité
Archives
23 février 2008

கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்து பஸ்ஸில் இன்று

கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்து பஸ்ஸில் இன்று காலை குண்டு வெடிப்பு

கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்து பஸ்ஸில் இன்று காலை 10.55 கல்கிசையில் வைத்து குண்டு வெடித்துள்ளது , 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் ,காயமடைந்தவர்கள் 10 ஆண்களும் , 7 பெண்களும் , 1 சிறுமியும் களுபோவில வைத்தியசாலையில் கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது. காயமடைந்தவர்களை சிலர் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Publicité
Publicité
22 février 2008

பூநகரிப் பகுதியில் சிறிலங்காவின் வான் தாக்குதலில்

பூநகரிப் பகுதியில் சிறிலங்காவின் வான் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பகுதியில் சிறிலங்கா வான்படை இன்று நடத்திய வான்குண்டுத் தாக்குதலில் 8 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


பூநகரிப் பிரதேசத்தில் கிரஞ்சி என்ற பகுதி மீது இன்று வெள்ளிக்கிழமை காலை 9:00 மணியளவில் சிறிலங்கா வான்படையினர் வான்குண்டுத் தாக்குதலை நடத்தினர்.

இதில் 8 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சிறிலங்கா வான்படையின் இந்த அகோரத் தாக்குதலால் அப்பகுதியில் இயங்கி வந்த அரசாங்கத்தின் தமிழ்ப் பாடசாலைச் சிறார்கள் அலறியடித்துக் கொண்டு வகுப்புகளை விட்டு வெளியேறி ஓடினர்.

இத் தாக்குதலில் படுகாயமடைந்த பொதுமக்கள் கிளிநொச்சி பொதுமருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொயவருகின்றது.

குண்டுத்தாக்குதலில் கொட்டப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.

படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரம் வருமாறு:

1. கதிர்வேலு திருநீலகண்டன் (வயது 79)
2. கிராஞ்சியைச் சேர்ந்த ஆசிரியரான சிவாநந்தி (வயது 27)
3. விஜயகுமார் விதுயா (வயது 09)
4. இந்திரன் லதா
5. தமிழரசன் சுமதி (வயது 30)
6. சசிகரன் கவிதநாயகி (வயது 34)
7. சசிகரன் காதீபன் (வயது 04)
8. சசிகரன் தமிழ்வேந்தன் (வயது 06)

ஆகியோரே படுகொலை செய்யப்பட்டவர்ள் ஆவர். இவர்களில் கவிதநாயகி, காதீபன், தமிழ்வேந்தன் ஆகிய மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


காயமடைந்தவர்கள்

பானுசன் - அகவை (06)
தர்சன் - அகவை (08)
அருளானந்தம் - அகவை (72)
தர்மலிங்கம் பூமணி - அகவை (65)










22 février 2008

மன்னாரில் படையினர், புலிகள் தொடர்ந்து கடும் மோதல்

மன்னாரில் படையினர், புலிகள் தொடர்ந்து கடும் மோதல் பலத்த இழப்புகள்; இருதரப்பும் பரஸ்பரம் தெரிவிப்பு

மன்னாரில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை நடைபெற்ற கடும் மோதலில் விடுதலைப் புலிகளுக்கு பலத்த சேதமேற்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ள அதேநேரம், கடந்த 24 மணிநேரத்தில் தங்கள் தாக்குதலில் எட்டுப் படையினர் கொல்லப்பட்டும் 40க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது புதன்கிழமை மாலை படையினர் நடத்திய தாக்குதலில் ஐந்து பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டதாகவும் 13 புலிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாமெனத் தெரியவருவதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், மன்னாரில் படையினர் மேற்கொண்ட சினைப்பர் தாக்குதலில் மூன்று புலிகள் கொல்லப்பட்டதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதல்களில் தங்கள் தரப்பில் இரு படையினர் கொல்லப்பட்டதாகவும் படையினர் கூறியுள்ளனர்.

இதேநேரம், புதன்கிழமை காலை முதல் நேற்று வியாழக்கிழமை காலை வரையான 24 மணிநேரத்தில் பரப்பான்கண்டல், உயிலங்குளம், பாலைக்குழி பகுதிகளில் எட்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 40 படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

சினைப்பர் தாக்குதல், பொறிவெடிகள் மற்றும் மிதிவெடிகளில் சிக்கியே படையினருக்கு இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் புலிகள் தெரிவித்தனர்.

நேற்றும் இந்தப் பகுதிகளில் இருதரப்புக்குமிடையே கடும் ஷெல்த் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

22 février 2008

தமிழ் மொழி உலகெங்கும் வியாபித்துள்ள போதிலும்

தமிழ் மொழி உலகெங்கும் வியாபித்துள்ள போதிலும் சிங்களமொழி இலங்கைக்குள் வரையறுக்கப்பட்டுள்ளது - விமல் வீரவன்ச கவலை

சிங்களமொழியில் சட்டத்துறையினை பயில்வதற்கு தடைவிதிக்கப்படுகின்றது. 20 வருடங்களுக்கு முன்னர் இந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்டத்துறையினை தேர்ந்தெடுத்திருக்க மாட்டார் என்று ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க கற்கை நிலையத்தில் இடம்பெற்ற தேசிய மொழி அதிகார சபையின் அறிக்கை வெளியீட்டு விழாவிலேயே விமல் வீரவன்ச எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் சர்வதேச தாய்மொழி தினமாக உலகம் முழுதும் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பங்களாதேஷின் இலங்கைக்கான தூதுவர் சாதாத் ஹுசேன் கலந்து கொண்டிருந்ததுடன் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது தேசிய மொழி அதிகாரசபையின் அறிக்கையின் முதற்பிரதி தூதுவர் சதாத் ஹுசேனிடம் வழங்கப்பட்டது. இங்கு தொடர்ந்தும் விமல் வீரவன்ச எம்.பி. மேலும் கூறியதாவது:எமது தாய்மொழி காப்பாற்றப்பட வேண்டும். மாறாக அது அற்றுப்போவதற்கு வழிவகுக்கக்கூடாது. தேசப்பற்றுள்ளவர்கள் என்ற வகையில் எமது தாய்மொழியை நாம் நேசிக்கின்றோம். தமிழ் மக்களுக்கான தமிழ்மொழி இலங்கையில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வியாபித்திருக்கின்றது.

ஆனால், சிங்களமொழியானது இலங்கைக்குள் வரையறுக்கப்பட்டிருக்கின்றது. காரணம் இலங்கை வாழ் சிங்களவர்கள் மட்டுமே சிங்கள மொழியை பேணி வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இலங்கையில் சட்டத்துறையில் கற்பவர்களுக்கு சிங்களமொழி இல்லாமல் செய்யப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது.

இது உண்மையில் சிங்களமொழியை அற்றுப் போகச் செய்யும் செயலாகும். கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டிருந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சட்டத்துறையில் தேர்ச்சியடைந்திருக்க முடியாது. அவர் அதனை தேர்ந்தெடுத்திருக்கவும் மாட்டார். எமது நாட்டில் சிங்களமொழியான தாய்மொழிக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளை இல்லாது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே தேசியமொழி அதிகாரசபையின் அறிக்கை வெளியிட்டு வைக்கப்படுகின்றது.

22 février 2008

விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை உயிருடன்

விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடிப்பது சாத்தியமற்றது - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை இலங்கை அரசாங்கம் கைது செய்யும் என்பதனை தான் நம்பவில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றின் வர்த்தக நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எதனையும் சமாளிக்கும் தன்மையும், மீண்டும் தனது முன்னைய நிலையை விரைவாக அடையும் தன்மையும் கொண்டவர்.வேலுப்பிள்ளை பிரபாகரனை இலங்கை அரசாங்கம் கைது செய்தால் இந்தியாவுக்கு அவரை நாடுகடத்தலாம் என்று நான் கருதுகின்றேன். வேலுப்பிள்ளை பிரபாகரன் எழுபதுகளில் பிற்பகுதியில் இருந்து செயற்பட்டு வருவதுடன், உயிர்தப்பியும் வருகின்றார்.

அவர் எப்போதும் எந்த சூழ்நிலைக்கும் தன்னை இயல்பாக்கும் தன்மையையும், மீண்டும் பழைய நிலைக்கு விரைவாக திரும்பும் தன்மையையும் உடையவர். எனவே அவர் அதனைத் தொடருவார் என்று நான் நம்புகின்றேன்.எனினும் எமக்கு வேலுப்பிள்ளை பிரபாகரனின் மீது பெரும் ஈடுபாடு கிடையாது.ஆனால் அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். எனவே இலங்கை அரசாங்கத்தினை அமைதி வழிக்கு கொண்டு வருவதற்கான முற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக நாம் அக்கறை கொள்ளவில்லை. ஆனால் கேள்வி என்னவெனில் உங்களால் வேலுப்பிள்ளை பிரபாகரனை உயிருடன் பிடிக்க முடியுமா? இல்லையா? என்பது தான். அது முடியுமா? இல்லையா? என்பது தொடர்பாக என்னால் உறுதியாக எதனையும் கூற முடியாது.

விடுதலைப் புலிகளை இலங்கை அரசாங்கம் தடை செய்தால் அது அரசியல் தீர்வு முயற்சியை மேலும் பின்னுக்கு தள்ளலாம். அதனால் அரசாங்கம் தற்போது எதனைச் சாதிக்கப் போகின்றது என்பது தொடர்பாக என்னால் எதனையும் உறுதியாகக் கூறமுடியாது. ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பதனை அவர்கள் தீர்மானிக்கட்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஒ பிளேக் அவ் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

Publicité
Publicité
22 février 2008

சர்வதேச பாராளுமன்ற ஒன்றிய குழு ஜனாதிபதியுடன்

சர்வதேச பாராளுமன்ற ஒன்றிய குழு ஜனாதிபதியுடன் நேற்று சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் மனித உரிமைக்கான பிரிவின் உறுப்பினர்கள் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச பாராளுமன்ற ஒன்றிய தூதுக் குழுவின் தலைவரான கனேடிய செனட்டர் சரோன் கார்ஸ்டெய்ர்ஸ், குழுவின் செயலாளர் இன்ங்போர்க் ஸ்வாஸ் ஆகியோர், இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இச்சந்திப்பில் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

22 février 2008

மட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால்

மட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்குகெடுப்பு ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது. தபால் மூல வாக்கெடுப்புக்கள் இன்றும் நாளையும் இடம்பெறுமெனவும் இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ். சுதாகரன் தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தலில் 934 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் உள்ளுர் மற்றும் வெளியூர் பிரமுகர்கள் ஈடுபடவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சித் தேர்தல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தல் கடமைகளில் 4300 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரசபை உட்பட ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கு 113 உறுப்பினர்களை தெரிவுசெய்யும் நோக்கில் பத்து வருடங்களுக்கு பின்னர் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

22 février 2008

யால இராணுவ கூட்டுப்படை ஒருங்கிணைப்பு கட்டளை தளபதி

யால இராணுவ கூட்டுப்படை ஒருங்கிணைப்பு கட்டளை தளபதி பதவியிலிருந்து பிரிகேடியர் சுதந்த திடீர் நீக்கம் கேணல் தேவேந்திர புதிதாக நியமனம்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யாலவில் அமைக்கப்பட்ட இராணுவத்தின் கூட்டுப்படை ஒருங்கிணைப்புக் கட்டளை மையத்திற்கு தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் சுதந்த ரணசிங்க, அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அந்தப் பதவிக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கேணல் தேவேந்திர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இம்மாவட்டத்திற்கான புதிய இராணுவத் தளபதியாக கேணல் தேவேந்திர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள பிரிகேடியர் சுதந்த ரணசிங்க இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அறிய வருகின்றது. அதேவேளை, இவர் எந்தப் பகுதியில் கடமையாற்றவுள்ளார் என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதேவேளை, புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள கேணல் தேவேந்திர பெரேரா, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் இராணுவம் மற்றும் பொலிஸ் என இரு பாதுகாப்பு பிரிவுக்கும் பொறுப்பாளராக பணியாற்றவுள்ளார் என்றும் தெரிவிகிக்கப்படுகின்றது.

22 février 2008

மனோ எம்.பி.க்கு பாவனைக்குதவாத வாகனம் கட்சியின்

மனோ எம்.பி.க்கு பாவனைக்குதவாத வாகனம் கட்சியின் அரசியல் குழு கண்டனம்

மனோ கணேசன் எம்பியின் பாதுகாப்புக்கு பாவனைக்குதவாத வாகனம் வழங்கப்பட்டுள்ளமையினை கட்சியின் அரசியல் குழு வன்மையாகக் கண்டிக்கின்றது என்று மேலக மக்கள் முன்னணியின் உபதலைவரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான வேலனை வேணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர் அதில் தெரிவித்துள்ளதாவது: மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசனுக்கு மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் பணிப்பின் பேரில் பாதுகாப்புக்கு எட்டுப் பொலிசாரும் ஒரு வாகனமும் (பிக்கப்) வழங்கப்பட்டது.

அதன்படி அவருக்கு வழங்கப்பட்ட வாகனம் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் எமது தலைவருக்கு உரிய பாதுகாப்புக்கு பொருத்தமான வாகனம் இல்லை. இந்த வாகனம் நீதிமன்ற ஆலோசனைக்கு மதிப்பு வழங்கும் நோக்கில் கடமைக்காக உபசாரத்துக்காக வழங்கப்பட்ட ஒரு வாகனம் என்றே எமது மேலக மக்கள் முன்னணியும் ஆதரவாளர்களும் கருதுகின்றார்கள்.

ஒரு கட்சியின் தலைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு தொழிற் சங்கத்தலைவருக்கும் நீதியான முறையிலேயே பாதுகாப்பு வாகனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இது எமது தலைவரின் பாரிய பொறுப்புக்களையும் கௌவரத்தையும் கணக்கில் எடுக்காது வழங்கப்பட்டதையிட்டு எமது கட்சியின் அரசியல் குழு தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. மீண்டும் நாம் நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் எனும் முடிவு தவிர்க்கப்படமுடியாத தொன்றாகும்.

22 février 2008

இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் கடத்த முயன்ற

இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் கடத்த முயன்ற நால்வர் கியூ பிரிவு பொலிஸாரால் கைது

இலங்கைக்க்கு பிளாஸ்டிக் சாக்குகள் மற்றும் மருந்துப்பொருட்களை கடத்த முயற்சித்த நால்வரை தமிழக கியூ பிரிவு பொலிசாவு முன்தினம் கைதுசெய்தள்ளனர்.

அவர்களிடமிருந்து ஏராளமான மருந்துப்பொருட்கள் கைபற்றப்பட்டள்ளதுடன் அவர்களது வாகனங்களும் கைபற்றப்பட்டள்ளன. இராமநாதபுரம் அருகே சோகையன் தோப்பு கடற்கரைப்பகுதியில் கியூபிரிவு பொலிஸார் முன்தினம் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பொலிஸார் விசாரித்தனர்.

அவர்களுக்கு பின்னால் வந்த மாருதி வனை பொலிஸார் சோதனையிட்டபோது அதில் மருந்துவர்கள் பயன்படுத்தும் உடைகள்,கையுறைகள், தொப்பிகள், முக அழகுக் கிரீம்கள் என்பன காணப்பட்டன. குறித்த வேனை மோதனையிட்டுக்கொண்டிருந்த போது அங்கு மற்றுமொரு மினி ரக வேன் வந்தது. பொலிஸார் சரக்கு மாருதி வேனை சோதனையிடுவதைக்கண்ட பின்னால் வந்த வேனிலிருந்தவர்கள் உடனடியாக தாம் வந்த வேனை திருப்பிக்கொண்டு வேகமாக சென்றுவிட்டனர்.

இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த பரமக்குடியைச் சேர்ந்த அப்துல்லா (வயது 38), இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷாஜகான் (வயது 35) ஆகியோரை சுற்றி வளைத்து விசாரித்தனர்.இவர்களுடன் மாருதி வேனில் வந்த முகமது மற்றும் இபுனா ஆகியோரையும் பொலிஸார் விசாரித்தனர். அப்துல்லாவுக்கு மொபைல் போனில் அடுத்தடுத்து அழைப்புகள் வந்தன.

இதையடுத்து அவர்களை பொலிஸார் விசாரித்தபோது இவையனைத்தும் இலங்கைக்கு கடத்த இருந்தமை தெரியவந்தது.இதையடுத்து நால்வரையும் கைதுசெய்தபொலிஸார் அவர்கள் கடத்த முற்பட்ட பொருட்களையும் கைப்பற்றினர். கைதானவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Publicité
Publicité
1 2 > >>
Publicité